Subscribe Us

header ads

மட்டு, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு!


மட்டக்களப்பு, அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்று எதிர்வரும் வாரமளவில் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.
பங்குபற்ற விரும்பும் ஊடகவியலாளர்கள் 065 2222832 அல்லது 0712164061 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தமது பெயரை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
முன்பதிவு செய்யப்பட்ட ஊடக வியலாளர்கள் மட்டுமே செயலமர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
கொழும்பிலிருந்து வருகைதரும் சிரேஸ்ட ஊடகவியலாளர்களால் இச்செயலமர்வு நடாத்தப்படவுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவு எண்ணிக்கையான ஊடக வியலாளர்களே அனுமதிக்கப்படவிருப்பதால் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்பதாக தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Post a Comment

0 Comments