முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக முன்னாள் பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று காலை சனிக்கிழமை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பஷில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தே மேர்வின் சில்வா முறைப்பாட்டைச் செய்துள்ளார்


0 Comments