அல்-கைதா இஸ்லாமிய அமைப்புக்கும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என அறிவதற்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் குறித்து ஆராயப்பட வேண்டும் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷில் உள்ள பலருக்கு அல்-கைதா மற்றும் ஹிஸ்புல்லாஹ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அல்-கைதா மற்றும் சன்னி முஸ்லிம் அமைப்புக்களில் இருப்பவர்கள் ஹிஸ்புல்லாஹ் குழுவிற்கு இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ள தகவல் உண்மையாக இருப்பின் பொஸ்டன் குண்டுத் தாக்குதலுடன் முஸ்தபா படர் அல்டின், தலால் ஹமியே மற்றும் மொஹமட் அலி ஜமாடெட் ஆகியோரே தொடர்புபட்டிருப்பார்கள் என ஈரானின் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments