சூழல் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இதன்போது அரசியல்வாதிகள் தலையிடுவார்களாயின் தனிப்பட்ட ரீதியில் தன்னிடம் அறிவிக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு இன்று வேண்டுகோள் விடுத்தார்.
சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை கையேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
சட்டவிரோதமான மண் அகழ்வு, மரம் வெட்டுதல் போன்றவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டார்.


0 Comments