Subscribe Us

header ads

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சராக நிமிக்கப்பட்டுள்ள எம்.எச்.ஏ.ஹலீம் தனது கடமையை பொறுப்பேற்றார்.

புதிய அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சராக நிமிக்கப்பட்டுள்ள எம்.எச்.ஏ.ஹலீம் தனது கடமையை தபால் திணைக்கள தலைமையகத்தில் இன்று (22) உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேற்படி நிகழ்வு தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன்போது அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத், பாராளுமன்ற உறுர்பினர்களான ஹூனைஸ் பாறுக், ஆர். யோகராஜன், மாகாண சபை உறுப்பினர்களான தயாகமஹே, முஜிபுர் ரஹ்மான், பைரூஜ் ஹாஜி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் மற்றும் தபால் திணைக்களத்தின் பொது முகாமையாளர் றோகன அபயரட்ண உள்ளிட்ட இரு திணைக்களங்களின் அதிகாரிகளும், ஊழியர்களும், சமயத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பட உதவி: Sonakar.com

Post a Comment

0 Comments