Subscribe Us

header ads

புத்தளம் அரசியல் எதிர்காலம் - ஒரு வாலிபன் பார்வையில் (பாகம் 1)



ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களில் பொதுத் தேர்தல் பற்றி மக்கள் கதைக்க ஆரம்பித்து விட்டார்கள். 25 வருடங்களாக வாக்களித்து வாக்களித்து தோற்றுப் போன புத்தளம் மக்களுக்கு இம்முறை சிறந்த முடிவுகள் மட்டுமின்றி பொதுத் தேர்தல் மீதும் நம்பிக்கை வந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நானும் பலவேறு வியூகங்களை வகுத்தேன். அவற்றை வெளியில் சொன்ன பொழுது என்னை ''அரசியல் அனுபவம் இல்லாதவன்'' என்றார்கள். நடைபெற்று முடிந்த மாகான சபை முடிவுகளுடன் ஒப்பிட்டு மகிந்தவின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டுள்ளது என கூறிய பொழுது ''மடயன்'' என்றார்கள். சிங்கள வாக்குகள் சரிக்கு சரியாக பிரிகின்ற பொழுது சிறுபான்மை வாக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்க போகின்றது என சொன்ன பொழுது ''சின்ன புல்லை அரசியல்'' என்றார்கள்.கடைசியில் என்ன நடந்தது என்பதை யாவரும் அறிவோம்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ச மட்டுமல்ல. பெரும் பலம் பொருந்தி காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் தான். அதோடு வெற்றிலை சின்னத்துக்கும் சங்கு ஊதப் பட்டு விட்டது. இனிமேல் வெற்றிலை சின்னமும் கிடையாது.

இச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகி விட்டது. சுதந்திர கட்சியின் கை சின்னமோ அல்லது மஹிந்த ஆரம்பிக்க போகும் புதிய கட்சியின் சின்னத்தை விட யானை சின்னம் மக்கள் மத்தியில் தற்காலத்தில் நன்கு அரியப் பட்ட சின்னம். எனவே அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆனால் புத்தளம் தேர்தல் தொகுதியில் மாத்திரம் பெரும்பான்மை கட்சிகளில் இருந்து வெற்றி பெற முடியாது என்பது உறுதி. இது எல்லோரும் நன்கு அறிந்த விடயம்.

தொடரும்...


-TPT-

Post a Comment

0 Comments