சிறி லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் கட்சி தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து பறிக்கப்பட உள்ளதாகவும் அப்பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சிரேஷ்ட உருப்புனர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்கிய அக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் போது மைத்திரி ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பதவி விலக அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது முக்கிய முன்னால் அமைச்சர்களான அத்தாவுட செனவிரத்ன, சரத் அமுனுகம, ரெஜினோல் குரே, பியசேன கமகே, ஜனக்க பண்டார தென்னக்கோன், சனத் ஜயசூரிய ஆகியோருடன் இன்னும் பலர் ஜனாதிபதியின் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விபரங்கள் விரைவில்...


0 Comments