Subscribe Us

header ads

ஜோதிடத்துக்கு இடமில்லை: புதிய தலைவர்


இனிவரும் காலங்களில் தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் ஜோதிட நிகழ்சி ஒளிபரப்பபடமாட்டாது என இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் புதிய தலைவர் சோமரத்ன திசாநாயக்க தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், முந்தைய நிர்வாகத்தில் ஜோதி நிகழ்ச்சிக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. 
மேலும் கடந்த காலத்தில் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் யாவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய குடும்பத்தினரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் பயனளிக்கும் வகையில் அமைந்திருந்தன. எனவே இதில் முதல் மாற்றமாக ஜோதிட நிகழ்சி ஒளிபரப்பபடமாட்டாது.
தொலைக்காட்சியில் தோன்றிய ஜோதிடர்கள் கடந்த ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாகவே செயற்பட்டனர். இச்செயற்பாடானது அவர்களையும் இழிவுப்படுத்தி நாட்டு மக்களையும் இழிவுபடுத்துவதாக அமைந்திருந்தது என்றார்.

Post a Comment

0 Comments