மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மிக பரிச்சயமான குரலை பல நாட்களுக்கு பின் கேட்டுள்ளார்.
அது வேறு யாருமில்லை ..எமது முன்னாள் ஜனாதிபதியும் சம்பிக்க ரணவக்கயின் ஹெல உறுமயுடன் பல வருடங்கள் கூட்டனி கட்சியாக இணைந்து இருந்த மஹிந்த ராஜபக்ச
චම්පික, ඔයාලා ඔක්කම එකතු වෙල මව පෙරඩ්ඩුව නෙඩ?
Chamibikka, Oyala Okkoma ekathu vela mawa peradduwa neda?
சம்பிக்க.. நீங்க எல்லாம் ஒன்றாக சேர்ந்து என்னை தோற்க வைத்து விட்டீர்கள் தானே?
எந்த வித கோபமும், கசப்புணர்வும் இன்றி முன்னாள் ஜனாதிபதி இந்த கேள்வியை அமைச்சர் சம்பிக்கவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு நட்பாக சில வசனங்களை பாவித்து அமைச்சர் பதிலளித்து உள்ளார்.
தனிப்பட்ட முறையில் ஹெல உறுமயவிறகோ எனக்கோ முன்னால் ஜனாதிபதியுடன் எந்த வித கருத்து வேறுபாடோ, கோபங்களோ இல்லை இறுதி கூட்டத்தில் கூட எமது கட்சி ஜனாதிபதியிடம் பல பிரேரணைகளை, ஒப்பந்தங்களை முன்வைத்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்ததை தொடர்ந்தே நாம் பொது வேட்பாளருடன் கைகோர்த்தது என அனைவருக்கும் தெரியும் என கூறிய அமைச்சர்.
தொலைபேசி அழைப்பை துண்டிக்கும் முன் அமைச்சருக்கு முன்னாள் ஜனாதிபதி புதிய அமைச்சை ஏற்றுக்கொண்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments