Subscribe Us

header ads

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை கொண்டு வருவதற்காக

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சியை கொண்டு வருவதற்காக நாட்டின் சகல மக்களும் கைகோர்த்து விடியலை நோக்கிய பாதைக்கு எமது நாடு செல்ல ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் மு.கா தலைமை தொடர்ந்தும் அநீதியை நிலைநாட்டுவது வருத்தத்தை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.கடந்த காலங்களில் ஒட்டுமொத்த தமிழ்,முஸ்லிம் மக்களும் மைத்திரி யுகத்தை உருவாக்க ஒன்றிணைந்த போது கரையோரமாவட்ட கோரிக்கை எனும் மாயையுடன் தமது பாராளுமன்ற இருக்கையையும்,அமைச்சியையும் தக்க வைத்து கொள்ள அன்றி வேறு எதற்காகவும் மகிந்த அரசை விட்டு விலகவில்லை என்பது கௌரவ அமைச்சர் ஹக்கீம் அவர்களின் மனசாட்சிக்கு நன்றாக தெரிந்த ஒன்றே.மைத்திரி யுகத்தை உருவாக்க நாட்டு மக்கள் அளித்த வாக்குகளில் 90% வாக்குகள் அன்னத்தை வந்தடைந்த ஒரே ஒரு தேர்தல் தொகுதி கல்முனை தொகுதி மட்டுமே என்பதை கௌரவ அமைச்சர் மறந்து போகிருந்தால் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 இந்த கல்முனை தொகுதியில் மக்கள் வாக்களித்து பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு  எந்த தலைவர்களினதும் வழிகாட்டல்கலும் இன்றி மக்கள் அன்னதிற்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து தபால் மூல வாக்களிப்பும் முடிந்த பின் அகில இலங்கை மக்கள் காங்க்ரெஸ் கட்சியை மக்கள் தலையில்  தூக்கி வைத்து கொண்டாடுவதை பார்த்து SLMC இன் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படப்போவதை அறிந்து அச்சத்துடன் கடைசி வரை மதில் மேல் பூனையாக இருந்த நீங்கள் தைரியமாக முடிவெடுக்க கல்முனை தொகுதி மக்களே பிரதான காரணம் என்பதை மறைக்கவோ/மறுக்கவோ முடியாத உண்மை. மஹிந்த ஆட்சியின் போது நீதி அமைச்சராக இருந்து நம் நாட்டுக்கும்,முஸ்லிம் சமூகத்திட்கும் நீதி வழங்க முடியாமல் போன நீங்கள் கல்முனை தொகுதிக்கு  அமைச்சையோ/பிரதி அமைச்சையோ  தராமல் தவிக்க விடுவதன் மூலம் எங்கள் தொகுதிக்கு  முதலமைச்சர்  பதவியை  தரப்போவதையா சொல்ல வருகிறீர்கள் என கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.சாய்ந்தமருது,கல்முனை,மருதமுனை, போன்ற முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய  கல்முனை தொகுதி தான் மு.கா வின் உயிர் மூச்சி என்பதை மறந்து இவ்வாறான செயற்பாடுகளை செய்வதன் மூலம் கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுசெல்வது தெளிவாக உணரமுடிகிறது. 

எது எப்படியாக இருந்தாலும் நீங்கள் வகித்த அமைச்‌சி பதவியுனூடாக கிழக்கு மக்கள் அடைந்த பயன் கேள்விக்குறியாகவே உள்ளது.உங்கள் அண்மைய கால செயல்கள் தலைவர் MHM.அஸ்ரஃப் தந்த முஸ்லிம்களின் அமானிதத்தை தவறாக வழிநடத்துவதாக உள்ளது. கட்சியின் ஏனைய உயர்பீடத்திற்க்கு இரட்டை வெகுமதிகள் வழங்க வேண்டும் என்பதற்காக எங்கள் உரிமைகளை தட்டி பறிப்பது எந்தவிதத்தில் நியாயம்.எங்கள் கல்முனை தொகுதிக்கு இராஜாங்க அமைச்சு/பிரதி அமைச்சை பெற்றுத்தர முன்வரவேண்டும்.அல்லது கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் இந்த தொகுதிக்கு ஒதுக்க முன்வரவேண்டும்.என SLMC தலைமையையும் கட்சி உயர்பீடத்தையும் அன்புடன் பணிவாக வேண்டிக்கொள்கிறேன். மேற்படி அரசியல் அங்கீகாரத்தை SLMC தர மறுதலிக்கும் பட்சத்தில் கட்சியின் அழிவுப்பாதை கல்முனை தொகுதியில் இருந்தே ஆரம்பிக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.மேயர் பதவியை பறிப்பது,மாகாண அமைச்சிக்கல் தர மறுப்பது,தேசிய அரசில் அமைச்சுக்கள் தர மறுப்பது,பிரதேச வாதத்திற்க்கு வழிவகுப்பது,இப்படி பல குற்ற சாட்டுக்கள் உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே.அதிமேதகு ஜனாதிபதியையும் மைத்திரி யுகத்தையும் ஆதரிக்க சுமார் 22 கூட்டங்கள் போட்ட நீங்கள் அமைச்சி பெறுவது சம்பந்தமாக திடீர் முடிவுகள் எடுத்தது புரியாத புதிராகவே உள்ளது. உங்கள் கோட்டைகளில் சரிவை ஏற்படுத்தி இராஜாங்கம் அமைக்க பலரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை நீங்கள் நாட்டின் சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவன் என்ற வகையிலும்,சிறந்த முஸ்லிம்  தலைவர்களில் ஒருவர் என்ற வகையிலும்  மண்ணுக்கான உரிமைகளை வழங்கி முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். அந்த வகையில் உங்கள் கட்சி நலனையும் க ல் முனை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நல்ல அமைச்சையோ அல்லது பிரதி அமைச்சையோ தேசிய அரசிலிருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும்.கிழக்கு முதலமைச்சரை எங்கள் தொகுதிக்கு வழங்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் என NDPHR இன் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும்.அல்-மீசான் பௌண்டசன் பணிப்பாளருமான அல்-ஹாஜ் ஹுதா உமர் தெரிவித்தார். -Huthaumar -

Post a Comment

0 Comments