Subscribe Us

header ads

நான் இனியும் பதவியில் இல்லை: அலவி மௌலானா அறிவிப்பு

மேல்மாகாண ஆளுனராக பதவிவகித்த அலவி மொளலானா கடந்த ஜனவரி 19ஆம் திகதியே தமது பதவியினை ராஜினாமா செய்துவிட்டதாக மீண்டும் பொதுமக்களுக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

சகல மாகாணங்களின் ஆளுனர்களையும் பதவி விலகும்படி புதிய அரசாங்கம் கேட்டதற்கிணங்கவே தானும் இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ள அவர்,  தன்னைத் தேடி பொதுமக்கள் நாளாந்தம் அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்படுவதாகவும் எனினும் தானும் தனது தனிப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே விலகி விட்டதாகவும் பொதுமக்களுக்கு அறிவிக்கும்
படி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- அஸ்ரப் ஏ சமத்

Post a Comment

0 Comments