Subscribe Us

header ads

தயாசிறி மற்றும் ஹரின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்


வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தேசிய அரசியலில் மீண்டும் இணைவதற்கான எண்ணம் இருப்பதனால் தற்போது தான் வகிக்கும் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட இருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.
இதே சமயம், ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெனாண்டோவும் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபையில் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்ததனால் இவர் புதிய முதலமைச்சராக கடந்த ஜனவரி 14ஆம் திகதி சத்தியபிரமாணம் எடுத்தார். கடந்த மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வேட்பாளராக போட்டியிட்டு அதிகமான விருப்பு வாக்குகளை இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments