Subscribe Us

header ads

சட்டக்கல்லூரி பரீட்சை இனிமேல் தமிழ் மொழியிலும் நடைபெறும்


சட்டக்கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது.

மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி பரீட்சை மொழி மூலம் தொடர்பில் நீண்ட நாள் சர்ச்சை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டக்கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்ற போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments