Subscribe Us

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிகரித்துள்ள குரங்குகளின் தொல்லை.


கிழக்கு மாகாணத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக புறத்தோட்டம், கோணாவத்தை, மீனோடைக்கட்டு பிரதேச மக்கள் மிகுத்த தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த குரங்குகள் சகல பழ மரங்களையும் பயிர்களையும் சேதமாக்குவதுடன், வீடுகளின் கூரைகளையும் சேதமாக்குகிறது. இந்த குரங்குகள் வளர்ந்த மனிதர்களையே பயமுறுத்தும் நிலையில் சிறுவர்களின் பெண்களின் நிலமையோ தனியாக தன் சொந்த வளவிற்குள் நடமாட முடியாத அளவுக்கு இருக்கிறது.

குரங்கு கூட்டத்தை கொல்ல எடுக்கும் எந்த நடவடிக்கையும் வனசீவராசி திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களினால் தண்டிக்கப்படக்கூடும் என மக்கள் அஞ்சுகின்றனர்.

எனவே இவ்விடயத்தில் ஊரின் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் நசீர், பிரதேச சபை தவிசாளர் அன்ஸில் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மனாப், முனாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை தொடர்புகொண்டு, இக்குரங்கு கூட்டத்தை பிடித்து காட்டுப்பிரதேசத்தில் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

தகவல் : சுலைமாலெப்பை அன்சார், அட்டாளைச்சேனை

Post a Comment

0 Comments