அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மஹிந்த ராஜபக்சக்களை விடவும் விரைவில் ஆட்சியை விட்டு வெளியேறிச் செல்ல நேரிடும் என மேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கட்சி நிற பேதமின்றி, இன மத பேதமின்றி மைத்திரி ஆட்சிக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு புரிந்து கொள்ளத் தவறினால் ராஜபக்சக்களை விடவும் விரைவில் வெளியேற நேரிடும்.
கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை இல்லாதொழிக்குமாறு நாம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தோம்.
கொலன்னாவ பிரதேசத்திற்கு யார் போதைப் பொருள் கொண்டு வந்தார்கள் என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.
போதைப் பொருள் வர்த்தகர்கள் தலைதூக்க இனி இடமளிக்க முடியாது என மரிக்கார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments