Subscribe Us

header ads

கற்பிட்டி பிரதேச சபையால் அறவிடப்படும் காணி வரி மதிப்பீட்டு வீதம் குறைக்கப்பட்டுள்ளது...

கற்பிட்டி பிரதேச சபையால் அறவிடப்படும் காணி வரி மதிப்பீட்டு வீதம் மக்களின் நீடநாள் வேண்டுகோளுக்கிணங்க குறைக்கப்பட்டுள்ளது
 
 
 
கௌரவ பிரதேச சபை தலைவர்
கல்பிட்டி.
வரிப்பண அதிகரிப்பை குறைப்பு செய்தமைக்காக நன்றியும் பாராட்டும் தெரிவித்தல்
நீண்ட காலத்துக்கு பிறகு காணிகளின் ஆண்டுப்பெருமானம் மதிப்பீடு செய்யப்பட்டதால் 2010 ம் ஆண்டிலிருந்து வீட்டுகாணி 9% ஆகவும் கடைக்காணி 12% ஆகவும் வசூலிக்கப்பட்டு வந்தது இவ்வரி விதிப்பு பொது மக்களுக்கு பெரியதொரு சுமையாக இருந்து வந்தது.
ü  வரி தொடர்பாக ஆட்சேபனைகள் சபையால் கோரப்பட்ட காலப்பகுதியில் முதலாவது முறையீடு 2010.02.09 இல் அப்போதைய பிரதேச சபை தலைவருக்கு கொடுக்கப்பட்டது ஆனால் எதுவித பரிசீலனைகளும் இடம்பெறவில்லை
ü  தற்போதைய பிரதேச சபை தலைவர் M.H.M மில்ஹாஜ் அவர்களுக்கு முதலாவதாக 2011.06.27 இல் கொடுக்கப்பட்ட முறையீட்டு கடிதம் 2011.06.30 இல் நடைபெற்ற சபைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு கூட்ட அறிக்கையில் இடம்பெற்றது.
ü  இதன் பிறகு 2012.06.28, 2013.08.28, 2014.01.24 திகதிகளில் கொடுக்கப்பட்ட கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு குறைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டு 2015 ம் ஆண்டு தொடக்கம் வரியை குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
ü  இவ்வுறுதிக்கமைவாக 2015 ஆம் ஆண்டிலிருந்து குறைத்து அறவிடுவதற்கு பெருமுயற்சி மேற்கொண்ட பிரதேச சபை தலைவர் அவர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை செயலாளருக்கும் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
 
-V.S.M.S.A.NEINA MARIKKAR-

 

Post a Comment

0 Comments