கிழக்கு மாகாண சபை முதலமைச்சுப் பதவி முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என்று எந்த மாகாண சபை உறுப்பினர்களும் கனவுகாண வேண்டாம்.
அப்படி அந்தப் பதவி கிடைத்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை எடுக்காது ஏன் தெரியுமா?
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தன்னை மிஞ்சிய அதிகாரத்தை யாரும் வைத்திரக்கக் கூடாது என்று நினைப்பவர்தான் மு.காவின் தலைவர் றஊப் ஹக்கீமாகும். இதை எல்லா மக்கள் பிரதிநிதிகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதை விளங்கிய மக்கள் பிரதிநிதிகள் தலைவரிடம் தட்டிக்கேட்கா விட்டால் அது வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமாகும்.
இந்த விடயம் தொடர்பில்,
உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாளை மறுமையில் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த உலகத்தில் தப்பினாலும் நாளை மறுமையில் யாரும் தப்ப முடியாது.
நான் ஒரு ஊடகவியலாளராக இருந்து கொண்டு இதை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றால் நானும் மறுமையில் கேள்விக்குள்ளாகி விடுவேண் என்ற பயத்தினால்தான் இதை தெரிவிக்கின்றேன்.
இதிலிருந்து நான் விடுபடவேண்டும் என்பதற்காகவே இதை எத்திவைக்கின்றேன்.
எல்லாம் அழ்ழாவின் நாட்டம் என்று அழ்ழாவின் மீது சுமையை யாரும் போட நினைக்கவேண்டாம் எல்லாவற்றையும் அவன் அறிந்தவன்.
--
M.FAIZAL ISMAIL


0 Comments