எமது அரசாங்கம் அரச சொத்துக்கள் எதனையும் விற்பனை செய்யவில்லை, முன்னர் ஏனையோரால் விற்பனை செய்யப்பட்ட அனைத்தும் தற்பொழுது மீளப் பெறப்பட்டுள்ளது என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெல்மடுல்லையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எதிர்கட்சி ஏனைய தரப்புடன் இணைந்து நாட்டின் துறைமுகம், விமான நிலையம் என அனைத்தையும் விற்பனை செய்வதற்கான சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளது. அதற்காக மெகா-டீல் ஒன்றை எதிர்கட்சிகள் உருவாக்கி இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


0 Comments