Subscribe Us

header ads

ஜனா­தி­பதித் தேர்­தல் : இறுதி முடிவு 9 ஆம் திகதி மாலை

எதிர்­வரும் 8 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஏழா­வது ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சகல ஏற்­பா­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்­தலின் இறுதி முடி­வுகள் ஒன்­பதாம் திகதி வெள்ளிக்­கி­ழமை மாலை அறி­விக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் செய­லகம் தெரி­வித்­துள்­ளது.
நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­களை சேர்ந்த 17 வேட்­பா­ளர்­களும் இரு சுயேச்சை வேட்­பா­ளர்­களும் போட்­டி­யி­டு­கின்­றனர். சட்ட விரோத தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கைகள் மற்றும் தேர்தல் வன்­முறை சம்­ப­வங்கள் அதி­க­ரித்­துள்­ள­மை­யினால் தேர்தல் தினத்­தன்று அந்த நிலைமை மேலும் மோச­ம­டை­யலாம் என தேர்­தல்கள் கண்­கா­ணிப்பு அமைப்­புக்கள் தெரி­விக்­கின்­றன.
தேர்தலின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்தன்று இரவு 10 மணியளவில் அறிவிக்கப்படலாம் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 

Post a Comment

0 Comments