நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலின் ஒருகட்டமான தேர்தல் பிரச்சாரப்பணிக்காக எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 31-12-2014 புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியின் தலைமையில் புத்தளம் ஹூதா பள்ளி அருகாமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பெரும்திரளான ஆதரவாளர்கள் வருகைத்தந்திருந்தனர்.
இப்பிரச்சார பணியினை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், சரத் பொன்சேக்கா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுத்தீன், ரவுப் ஹக்கீம், ஹுனைஷ் பாருக், மாகாணசபை உறுப்பினர்களான அசாத் சாலி, கிங்ஸ்லிலால் பெர்னாந்து, நியாஸ், ரிப்கான பதியுத்தீன், ரயீஸ் உள்ளூராட்சி மன்ற சபை உறுப்பினர்களான அலிக்கான், பைரூஸ் முனனாள் உறுப்பினர் அலி சப்ரி, ஜனாதிபதி வேட்பாளர்களான திரு விக்கிரமபாகு கருணாரத்ன, இல்லியாஸ் ஹாஜியார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புகைப்பட உதவி : Hasni Ahmed / PuttalamOnline
புகைப்படம் – UNP MEDIA
WAK

0 Comments