அத்தியாவசியப் பொருட்கள் 13இன் விலைகள் குறைக்கப்படும்.
சீனியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
400 கிலோகிராம் பால்மாவின் விலை 61 ரூபாவால் குறைப்பு
கோதுமை மாவின் விலை ரூ.12.50 குறைப்பு
நெத்தலி கருவாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைக்கப்படும். இதன்மூலம் 15 ரூபாவால் குறைக்கப்படும்.
பாசிப்பயறு 1கிலோவின் விலை 30 ரூபாவால் குறைப்பு.
டின்மீன் விலை 60 ரூபாவால் குறைப்பு
கொத்தமல்லிக்கான விஷேட பண்ட வரி 30 ரூபாவால் குறையும்.
உழுந்து கிலோவொன்று 60 ரூபாவால் குறையும்.
சமையல் எரிவாயுவின் விலை 300ரூபாவால் குறைப்பு.
மாசி கிலோவொன்று 200ரூபாவால் குறைப்பு.
வரி வாட்டி சலுகைகள்
அரசவங்கிகளில் ரூ.2லட்சத்துக்குமேல் நகை அடகுவைத்திருப்பவர்களுக்கான வரி தள்ளுபடி.
அதிசொகுசுவாய்ந்த வீடுகளுக்கு வருடாந்தம் ஒரு மில்லியன் ரூபாய் இல்ல வரி.
இலங்கை பிரஜாவுரிமையை கைவிட்டு செல்கின்றவர்கள் கொண்டுசெல்லும் பணத்துக்கு 20 சதவீதம் வரி.
சொகுசு வீடுகளுக்கு ஒருதடவைமட்டும் வரி அறவிடப்படும்.
2,000 மில்லியன் ரூபாவுக்கு கூடுதலாக வருமானம் பெறுவோருக்கு 20 சதவீதம் வரி.
உற்பத்தியின் போது செலுத்தப்படும் ஆகக்குறைந்த வரிமட்டம் 750,000 வரை உயர்த்தப்படும்.
1,000 இயந்திரவலுவுக்கு குறைவான வாகனத்துக்கான வரி 15 சதவீதம் குறைப்பு.
சீமெந்து மற்றும் உருக்குக்கான தீர்வை குறைப்பு.
இதன் மூலம் சீமெந்து மூடையொன்றின் விலை 90 ரூபாவால் குறையுமென எதிர்பார்ப்பு.
மோட்டார் வாகனங்களை சேகரிக்கும் நிறுவனங்கள் செலுத்தாத வரிகளை மீளப்பெற யோசனை.
இதன் மூலம் 12,000 மில்லியன் வருமானம் எதிர்பார்ப்பு. மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டிய வரிக்கு தள்ளுபடி.
எதனோல் இறக்குமதியை கட்டுப்படுத்த சுங்க பிரிவுகளில் ஸ்கேன் இயந்திரம் பொருத்த நடவடிக்கை.
5,000 ரூபாவாக இருந்த திருமண மற்றும் பதிவுக்கட்டணம் 1,000 ரூபாவாக குறைப்பு. - See more


0 Comments