Subscribe Us

header ads

ஒபாமாவின் பிள்ளைகள் இந்தியா செல்ல பாடசாலை லீவு மறுப்பு

மெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மிசிலி தம்பதியருக்கு சசா, மலியா என்று 2 மகள்கள் உள்ளனர். சசாவுக்கு 16 வயதாகிறது. மலியாவுக்கு 13 வயதாகிறது.

சசா, மலியா இருவரும் வாஷிங்டனில் உள்ள பாடசாலையில் படித்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் ஒபாமா வெளிநாடுகளுக்கு செல்லும் போது உடன் செல்வதுண்டு. வருகிற 25௲ந்தேதி ஒபாமா இந்தியா செல்லும் போது, சசா, மலியா இருவரும் உடன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் படிக்கும் பாடசாலையில் அவர்களுக்கு லீவு கிடக்கவில்லை.

பாடசாலைக்கு விடுமுறை விடப்படும் நாட்களில் வெளிநாடு செல்லுங்கள். இப்போது வகுப்புகளை தவிர்க்காதீர்கள் என்று சசா, மலியா, இருவரிடமும் பாடசாலை நிர்வாகம் கேட்டு கொண்டது. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஒபாமா இந்தியா செல்லும் போது அவருடன் அவர் மனைவி மிசிலி மட்டும் உடன் செல்வார் என்று அமெரிக்க பாதுகாப்பு துணை ஆலோசகர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments