சவுதி அரேபியாவில் தனது சகோதரர் அப்துல்லாஹ் வின் மறைவுக்குப் பிறகு மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் பின் அப்துல் அஸீஸ், அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை மேட்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அங்கு அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதோடு, சில வாரங்களுக்கு முன்னர் மறைந்த மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸின் மூலம் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மேலும், இந்த மாற்றங்களின் அடிப்படையில், மன்னர் சல்மான் பிரதமராகவும், முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ், முதல் துணை பிரதமராகவும், அடுத்த முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் நாய்ப் பின் அப்துல் அஸீஸ், இரண்டாவது பிரதி பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


0 Comments