Subscribe Us

header ads

ஹைதராபாத்தில் கொத்தடிமைகளாக 90 சிறுவர்கள்


ஹைதராபாத்தில் காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பீகாரைச் சேர்ந்த 90 சிறுவர்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 8 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறார்கள் இருந்துள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மீட்கப்பட்ட சிறார்கள் மனிதாபிமானம் அற்ற முறையில் மிகச் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இரவு நேரங்களிலும் தொடர்ந்து பணியாற்ற வைக்கப்பட்டுள்ளனர்.
பீகாரில் வறுமையில் வாடும் குடும்பங்களில் இருந்து வெறும் ரூ.5 ஆயிரம் கொடுத்து இந்த சிறார்களை வாங்கி வந்த கும்பல், மிகவும் கடினமானப் பணிகளிலும், வளையல் செய்யும் வேலையிலும் ஈடுபடுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை ஹைதராபாத்தில் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 90 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments