Subscribe Us

header ads

ஒருநாள் போட்டியில், அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான ஆட்டம் காரணமாக இலங்கை அணி வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றது.

குமார் சங்கக்காரா ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களையும், திலகரட்ன டில்சான் 83 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 287ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்திருந்ததுடன்  நியூசிலாந்துக்கு 288 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து முதலே தடுமாறி விக்கெட்டுக்களை பறிகொடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 253ஓட்டங்களை மாத்திரம் பெற்று 35ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

மேலும் இந்தப் போட்டியில் குமார் சங்கக்காரா மற்றுமொரு சாதனையை பதிவு செய்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த இலங்கையர் என்ற பெருமையை இன்று பதிவு செய்தார். 396 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சங்கக்கார 13580 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை முன்னதாக இந்த சாதனையை சனத் ஜெயசூரியா தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments