ஒரு காட்டிலே ஒரு குரங்கு இனம் வாழ்ந்து வந்ததாம், இனம் அளவில் அது சிறுபான்மையாக இருக்கும் அதே நேரம் பெரும்பாண்மை இனமாக அணில் இனமே அந்த காட்டை ஆண்டு வந்தது. ஆனாலும் அந்த பெரும் அடர்ந்த காட்டில் “குரங்குகளின் கோட்டை” என்று சொல்வது போல ஒரு சில பெரிய பண்மைகால மரங்களும் இருந்தன. அந்த மரம் சார்ந்த இடங்களில் அணிலுக்கு எந்த ஆட்டமும் போட முடியாது. இப்படி இருந்த காட்டில் புலி இனம் ஒன்று காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை முயற்சித்தது, ஏன் இறுதியில் கடலுக்கு அப்பால் இருக்கும் காடுகளில் இருந்து ஆயுதங்களை கொண்டுவந்து கூட போராட்டம் நடத்தியது. ஆனால் இறுதியில் இந்த அணில் இனம் புலிகளை இறக்கம் இன்றி கொன்று புதைத்தது. புலி இனமே இந்த காட்டில் அழிந்துவிட்டதாக பல காடுகளில் பேசப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு வரலாற்றை கொண்டது தான் இந்த “இமோஷான்“ என்று அழைக்கப்படும் இந்த காடு.
இந்த காட்டில் அணில் இனத்தை சேர்ந்தவர்கள் தான் ராஜாவாக வர வேண்டும் என்பது ஒரு வழமை, வேறு எந்த இனத்தை சார்ந்தவர்களும் வரமுடியாது காரணம் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்படுபவர் அணில் இனத்தில் முக்கிய தேவாலையமாக இருக்கும் ஒரு தேவாலயத்தில் சென்று ஆசிர்வாதம் பெற்றுவிட்டுத்தான் ராஜாவாக முடி சூட முடியும். அந்த தேவாலயத்தினுள் அணில் மட்டும் தான் செல்லமுடியும். இதனால் தான் வேறு இனம் ராஜாவாக முடிசூட முடியாது என்ற வழமை நென்நெடும் காலமாக இருக்கிறது.
இப்படி இருக்கும் இந்த இமோஷான் காட்டிலே இரண்டு தடவை தொடர்ந்தும் ராஜாவாகா இருந்த ஒரு பெரியா ராஜா தான் “எம்மார்” என்று அழைக்கப்படும் வெள்ளை அணில். இவர் ஏன் பெரிய ராஜ என வர்ணிக்கப்படுகிறார் என்றால், இவருடைய காலத்தில் தான் 30 வருடமாக “இந்த காட்டை பிரித்து தரவேண்டும்” என்று போராடிய புலி இனம் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ராஜா மூன்றாம் முறை முடிசூட தயாராகும் போது அவருடனேயே இருந்த ஒரு வெள்ளை அணில் அவருக்கு ஒரு சில காரங்களை முவைத்து துரோகம் செய்துவிட்டு, ராஜாவாக முடி சூடிக்கொண்டது. இதற்கு அணில் இனத்தினுள் இருக்கும் கருப்பு அணில் பிரிவுகள் புதிய ராஜாவுக்கு முடியை சூடிக்கொள்ள உதவி செய்தது, அது மட்டும் இல்லாது புலி இனத்தின் முழு பகுதியும், குரங்கினத்தின் பெரும் பகுதியும் இந்த புதிய ராஜாவை சிம்மாசனத்தில் அமர வைக்க மிகப் பெரிய ராஜ தந்திரங்களை செய்தது. சிறு பான்மையாக இருக்கும் இரண்டு இனமும் பழைய ராஜாவின் மேல் மிக்கவும்வேருப்பு கொண்டதே புதிய ராஜாவை இவர்கள் ஆதரிக்க காரணமாக இருந்தது. இப்போது இந்த இமோஷான் காட்டின் புதிய ராஜா “எம்த்ரீ” என்று அழைக்கப்படும் வெள்ளை அணில். *இதே அணில் வைகிய சேர்ந்தவர்தான் பழைய ராஜாவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் போது புதிய ராஜாவுக்கு இந்த காட்டில் இருக்கும் அனைத்து பெரிய மரங்களை சுற்றி வாழும் (காட்டின்) அங்கத்தவர்களுக்கு உதவி செய்ய, பெரிய மரங்களை அடிப்படையாக கொண்டு “ராஜதந்திரிகள் தேவை” என்ற விண்ணம் ஒன்று முழு காட்டிலும் அறிவிக்கப்படுகிறது (அல்லது கூடிய விரைவில் அறிவிக்கப்படும்). அதே நேரம் ராஜாவின் மாளிகையில் ஒன்று கூடும் ராஜதந்திரிகள் தான் இந்த காட்டில் புதிய ராஜாவின் கீழ் வரப்போகும் புதிய சட்டத்தினை நடைமுறை படுத்துவதா? இல்லையா? என்ற ஆணையை வழங்கப்போகிறார்கள் என்றும் அத்தோடு ராஜாவின் அதிகாரத்தில் ஒரு பெரிய பகுதி வரப்போகும் ராஜாவின் புதிய ராஜதந்திரிகளினால் தெரிவு செய்யப்படும் ஒரு ராஜதந்திரிகளின் தலைவனுக்கு கொடுக்கப்படும் என்பதும் உறுதி. அப்படிஎன்றால் ராஜதந்திரிகள் தலைவனுக்குத் தான் ராஜாவை விட இந்த காட்டில் அதிகாரம் அதிகமாக இருக்கும் என்று முழு நாடுமே அறிந்திருந்தது.
இப்படிப்பட்ட சூழ் நிலையில் புதிய ராஜாவாக வந்து இருக்கும் “எம்த்ரீ” என்ற வெள்ளை அணில் பல இனங்களின் உதவியினாலேயே ராஜமுடியை சூடிக்கொண்டது, ராஜ தந்திரிகளின் தெரிவின் போது புதிய ராஜாவுக்கு உதவி செய்த மற்ற இனம் எல்லாம் ராஜதந்திரிகள் தெரிவில் ஓடித்திரியும் நேரம், பழைய ராஜாவின் காலத்தில் கடமை புரிந்த ராஜ தந்திரிகளை அதிகமாக புதிய ராஜாவின் மாளிகைக்குள் புதிய ராஜதந்திரிகளாக அனுப்பினால், புதிய ராஜாவில் இருந்து பிரியப்போகும் பெருமளவிலான அதிகாரங்களை ராஜதந்திரிகளின் தலைவனாக பழைய ராஜா பெற்றுக்கொண்டு மீண்டும் இந்த காட்டின் அதிகாரம் உள்ள ராஜதந்திரிகளின் தலைவனாக பழைய ராஜா வந்துவிடும் என்று ஒரு கணிப்பும் இந்த காட்டின் நரிகளுக்கிடையில் பேசப்பட்டுவருகிறது.
இப்போது குரங்குகள் மற்றும் புலிகள் வாழும் பெரிய மரங்களில் “யார் எங்களில் இருந்து ராஜமாளிகைக்கு ராஜதந்திரியாக செல்வது” என்ற போட்டி ஆரம்பித்துவிட்டது. குரங்குகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் இந்த இடத்தில், குரங்குகளின் ராஜதந்திரியாக ஒருவர் ராஜமாளிகைக்கு செல்லலாம். அதே போல புலிகளின் பிரதேசத்தில் இருக்கும் எல்லா புலிகளும் ஒன்றாக சேர்ந்து அவருடைய ராஜதந்திரியை புதிய ராஜமாளிகைக்கு அனுப்பலாம். அதே போல வெள்ளை அணில்களை வேறாகவும், கருப்பு அணில்கள் வேறாகவும் புதிய ராஜ தந்திரிகளை ராஜ மாளிகைக்கு அனுப்ப தாயராகிறது. காரணம் பிரியப்போகும் அதிகாரத்தை கருப்பு அணில் பெறவேண்டும் என்றால் கருப்பு அணில்கள் ராஜதந்திரிகளில் அதிகாமா இருக்க வேண்டும் அதே நேரம் வெள்ளை அணில் அதிகாரத்தை பெற வேண்டும் என்றால் ராஜதந்திரிகளில் அதிகமானோர் வெள்ளை அணிலாக இருக்க வேண்டும். இங்கு புதிய ராஜா கருப்பு அணில்களின் உதவியில் முடியை தூடிக்கொன்டாலும், வெள்ளை அணில்களின் தலைவன் என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு விட்டது, காரணம் வெள்ளை அணில்களின் கொள்கையில் பழைய ராஜாவோடு சேர்ந்து இத்தனை காலமும் கருப்பு அணில்களை துறந்ததி அடித்தவர் தான் இந்த புதிய ராஜா . பழைய ராஜாவும் இதே கொள்கை உடையவர்தான்.
இதே நேரம் தனக்கென ஒரு பெரிய மரம் இல்லாமல் கருப்பு மற்றும் வெள்ளை அணில்களோடு சேர்ந்து வாழும் குரங்குகள் மற்றும் புலிகள் என்ன செய்யப்போகிறது என்பது தான் பிரச்சினை?
இப்படிப்பட்ட ஒரு பிரச்சினை இந்தக் காட்டில் பல மரங்களில் நடந்தாலும். நான் வாழும் “புத்தரம்” என்ற மரத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. எங்களது மரத்திலே சரிக்கு சரிபாதி அணில்களும் குரங்குகளும் உள்ளன, இதில் ஒரு சிறிய பகுதியாக புலிகளும் வாழ்கிறது. நான் வாழும் கிளையில் கருப்பு அணில்களின் கொள்கைகள் மிகவும் வலிமையாக ஊண்டப்பட்டு இருக்கிறது. குரங்குகள் கூட காலம் காலமாக கருப்பு அணில்களின் கொள்கைகளில் இருந்தே மரங்களின் தோப்பு மன்றத்திற்கு மந்திரிமார்களை அனுப்பி இருக்கிறது. ஆனால் கவலையான விடயம் அரைவாசிக்கு அரைவாசி அணிலும் குரங்கும் வாழும் இந்த மரத்தில் ராஜ மாளிகைக்கு செல்லும் ராஜதந்திரிகளின் ஒரு குரங்கு கூட எங்களது கிளையில் இருந்து இதுவரை சென்றதில்லை. எதோ மற்ற குரங்குகளின் மரங்களில் இருந்த நல்ல குரங்குகளின் தலைவன் எங்களுக்கு அவர்களின் உதவியாக ஒரு ராஜதந்திரி பதவியை தந்தார். ஆனால் எங்களது கிளையில் இருந்து ஒரு குரங்கு கூட சென்றது இல்லை ஆனால் எங்களது கிளையில் இருக்கும் அணில்கள் பல சென்று வருகின்றன.
இப்படி “எங்களது மரத்தில் ஏன் குரங்குகள் ராஜமாளிகைக்கு செல்வது இல்லை” என்று ஆராய்ச்சு ஒன்று நடத்துவதற்கு “பீயீப்” என்ற ஒரு குரங்கு கூட்டம் ஒவ்வொரு குரங்குகளின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் சென்று குரங்குகளுக்கு விளக்கம் கொடுக்கிறது. இந்த முறை “ஒரு ராஜதந்திரியை அனுப்புவோம்” என்ற ஒரு நல்ல நோக்கத்தில். அதே நேரம் கருப்பு அணிலின் கோட்டையாக இருக்கும் இந்த கிளையில் கருப்பு அணில்களின் கொள்கையோடு ஒரு குரங்கு நிச்சயம் ராஜமாளிகைக்கு செல்ல தயாராகும். அதே நேரம் வெள்ளை அணில்களோடு ராஜமாளிகைக்கு செல்ல கொள்கையில் ஒரு குரங்கும் தயாராகும்.
அணில்களோடு சேர்ந்து ராஜதந்திரியாக ராஜமளிகைக்கு செல்ல எடுத்த முயற்சி அத்தனையும் இத்தனை காலமும் தோல்வியடைந்த காரணம், நமது குரங்குகள் எல்லோரும் நமது குரங்கிற்கு உதவி செய்வது இல்லை, அதே நேரம் அணில்களிடம் இருந்து உதவியை எதிர்ப் பார்ப்பதும் இல்லை கேட்பதும் இல்லை. ஆனால் அணில்கள ஒவ்வொரு முறையும் குரங்கின் உதவிகளை பெற்று செல்வது வழமை.
நமது கிளையில் இருந்து ஒரு குரங்கு ராஜமாளிகை செல்லவேண்டும் என்றால், ஏதாவது ஒரு அணிலின் கொள்கையில் சேர்ந்து, அனைத்து குரங்குகளின் உதவிகளை பெற்றெடுக்க வேண்டும் அதே நேரம் அணில்களின் உதவியை பெறுவதற்கு பொருத்தமான ஒரு குரங்கு ராஜதந்திரியாக களமிறங்க வேண்டும். அதே நேரம் புலிகளின் உதவியையும் பெறக்கூடிய குரங்காகவும் இருக்க வேண்டும். இங்கு முக்கியாமான விடயம் முதலில் நமது கிளையில் இருக்கும் அனைத்து குரங்குகளும் ஒரு ராஜாதந்திரிக்கு உதவி செய்ய வேண்டும்.
இதை செய்யாமல் குரங்குகளுக்கு என மட்டும் ஒரு கொள்கையை வகுத்து, அதில் எமாற்றுவதட்க்காக புலிகளையும் அணில்களையும் பொய்க்கு உதவிக்கு எடுத்து ஏற்கனவே ராஜதந்திரியாக இருந்த அணில்களை எதிர்த்து ஒரு ராஜதந்திரியை பெற்றெடுப்பது என்பது கடினமான விடயம். அது சாத்தியம் இலாத விடயம்.
“ஒரு கிளைக்கு ஒரு ராஜதந்திரிகளை தெரிவு செய்வது” என ராஜா புதிய அறிவித்தலை அறிவித்தால், கருப்பு அணில் அல்லது வெள்ளை அணில்களின் கொள்கையோடு இணைந்து ஒரு ராஜதந்திரியை நமது கிளையில் இருந்து அனுப்பலாம். ஆனால் இப்போது இருப்பது ஒரு மரத்தில் இருந்து சில ராஜதந்திரிகளை எடுப்பது என்பதால் அணில்களின் உதவிகள் இல்லாமல் ஒருபோதும் குரங்குகள் ராஜமாளிகைக்கு செல்ல முடியாது. அணில்களின் கொள்கைகளை புறம் தள்ளி அணில்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் முடியாது ஆகா அணில்களின் கொள்கையை மதித்து குரங்குகள் அனைத்தும் அணிலின் கொள்கையில் இருக்கும் நமது குரங்கிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் அதே போல அணிலின் உதவிகளும் பெறப்பட வேண்டும்.
அணில்களின் உதவிகள் இல்லாமல் மரங்களின் தோப்பு மன்றத்துக்கு செல்ல முடியும் என்பது சாத்தியமாக இருந்தாலும், இது அணில்களின் உதவிகள் இல்லாமல் சரிவராது. அணில்களிடத்தில் இருந்து உதவிகள் நிச்சயம் தேவை.
“நான் குரங்கு (அல்லது புலி)”, “அவன் அணில்” என பிரித்து கொள்கை பேசுவது தனியாக குரங்குகள்(அலல்து புலிகள்) வாழும் மரத்தில் சாத்தியமாகும் ஆனால் அணில்களோடு ஒன்றாக வாழும் இடத்தில் ஒரு போதும் சாத்தியமாகாது.
ராஜதந்திரிகளின் தெரிவு அடுத்து இந்த காட்டை ஆளப்போவது யார் என்று கேள்விக்கு னியாளியான ஒரு பதிலை தரக்கூடியதாக இருக்கும்!
-இப்படிக்கு புத்தரம் மரத்தில் இருக்கும் ஒரு குரங்கு-


1 Comments
yenma.. ippadi eluthureengalema....eppama naanga wasichi mudikirathu..surukkama sollapadatha..indha aaya sutta wada katha ellarukum teryume raasa.....
ReplyDelete