Subscribe Us

இலங்கையில் புதிய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசு எடுத்தும் வரும் நடவடிக்கையை பாரட்டியுள்ள அமெரிக்கா, மைத்ரிபால சிரிசேனா அரசுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கி இருப்பதகாவும்  தெரிவித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வெளியுறவு துணை செயலர் ஆசியா நிஷா தெசாய் படேல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில், ”புதிய அரசிடம் இலங்கை மக்களின் எதிர்பார்ப்புகள்தான் எங்களின் எதிர்பார்ப்பும் ஆகும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய அரசுக்கு உறுதுணையாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். 
ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில தினங்களில் அவர்கள் எடுத்த நடவடிக்கைகளை நாங்கள் பாரட்டுகிறோம் உண்மையென்னவன்றால் அங்கு அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு  பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றதொடங்கியுள்ளது. புதிய அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் எதிர்நோக்கி காத்து இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 
இலங்கையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டுமுறை தொடர்ந்து அதிபர் பதவி வகித்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments