Subscribe Us

header ads

இலங்கை மீதான தடையை நீக்க சில மாதங்களாகும்!


இலங்கை மீன் தயாரிப்புகளுக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

பெல்ஜியம் பிரசல்ஸ் நகரிற்கு அண்மையில் சென்ற இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கல சமரவீர ஐரோப்பிய ஒன்றிய சமுத்திரங்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான ஆணையாளருடன் கலந்துரையாடியதாக தெரியவந்துள்ளது. 

இதன்போது மீன் தயாரிப்புகளுக்கான தடையை நீக்க இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளதோடு, சட்டவிரோத மீன்பிடியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை இந்த தடை நீக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை மங்கல சமரவீர இன்று நாட்டுக்குத் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments