Subscribe Us

header ads

நானில்லை ‘பசில்’ தான் காரணம்! ரணிலுக்கு விமல் வீரவன்ச பதில்!

மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்த விமல் வீரவன்ச அடக்கி வாசித்தல் நலம் என நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தடங்கிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தேர்தல் தோல்விக்குக் காரணம் தானில்லையெனவும் அதற்கான முழுப் பொறுப்பும் பசில் ராஜபக்சவையே சாரும் எனவும் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், பசில் ராஜபக்ச அனைத்து அதிகாரங்களையும் தன்னிடமே வைத்துக்கொண்டதால் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியிருந்தது போன்று குடும்ப ஆளுமையை உடைத்து யாராலும் இயங்க முடியாது போனதாகவும் மஹிந்தவின் தோல்விக்குத் தான் காரணமில்லையெனவும் தன்னால் வாக்குகள் அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் புதிய சிந்தனைகள், மாற்றங்கள் இடம்பெறுவதை பசில் ராஜபக்ச ஏற்றுக்கொள்ள மறுத்த அதேவேளை மஹிந்த ராஜபக்சவும் தனது சகோதரனைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments