மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது புலி முத்திரை குத்த அமைச்சர் விமல் வீரவன்ஸ கடந்த சில தினங்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 31 ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அரசியல் விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட வீரவன்ஸ, மன்னார் ஆயரும், பொதுவேட்பாளரும் சந்தித்த புகைப்படம் ஒன்றை காட்டி மைத்திரிபால புலி ஆதரவாளரை சந்தித்ததாக கூறினார்.
அத்துடன் இராயப்பு ஜோசப் யார் என்பதை முழு நாடு அறியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், மன்னாரில் நேற்று தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மடு தேவாலயத்திற்கு சென்று ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றதுடன் தேவாலயத்தின் திருப்பலி பூஜையிலும் கலந்து கொண்டார்.
விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு அமைய, இராயப்பு ஜோசப் ஆண்டகை புலிகளின் ஆதரவாளர் என்றால் மகிந்தவும் அப்படியானராகவே இருப்பர் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ஸவை எதிர்க்கட்சியின் சேறுவன்ஸ என்றே அழைத்து வருகின்றனர். எதிர்க்கட்சியினருக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதே அதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments