Subscribe Us

header ads

சீனாவில் தாய்ப்பால் பருக்கும் விபசார வலையமைப்பை நடத்திய குழுவினர் கைது

சீனாவில் தாய்ப்பால் பருக்கும் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த குழுவொன்றை சேர்ந்தவர்களை அந்நாட்டு பொலிஸார் முற்றுகையிட்டு கைது செய்துள்ளனர்.  

தாய்ப்பால் வழங்கும் நிலையிலுள்ள இளம் தாய்மார்களிடம் "வாடிக்கையாளர்களை" தாய்ப்பால் அருந்தச் செய்து அதற்காக பணம் வசூலிக்கும் நடவடிக்கையை இக்குழுவினர் மேற்கொண்டு வந்ததாக சீன பொலிஸார் தெரிவிததுள்ளனர்.  

பெய்ஜிங், ஹேபெய், மற்றும் ஜியாங்ஸி பிராந்தியங்களைச் சேர்ந்த பொலிஸார் அண்மையில் கூட்டாக இந்த முற்றுகைகளை நடத்தியிருந்தனர்.  

இதன்போது இளம் தாய்மார்களை இந்த விசித்திர விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் 15 பேரை பொலிஸார் கைது செய்தனர். 

இப்பெண்கள் வாடிக்கையாளர்களுக்கு தாய்ப்பால் வழங்குவதால் தமது சொந்தக் குழந்தைகளுக்கு புட்டிப்பாலை வழங்கிவந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

சீனாவின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர் இவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  

மேற்படி முற்றுகை நடவடிக்கையை சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments