எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இணைந்து செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில காலம் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறசெய்ய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். அன்று முதல் மீண்டும் அவர் அரசியல் களத்துக்கு திரும்பியுள்ளார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற தேசிய செயற்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்த லில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடி க்கைகளில் நேரடியாகக் களமிறங்க உள்ளதாக வும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவையும் இந்த முன்னணி யின் தேர்தல் பிரசாரங்களில் இணைத்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகிய மூவரையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார மேடைகளு க்கு அழைத்துவர அவர்கள் திட்டமிட்டுள்ள தாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது. Virakesari.lk
0 Comments