Subscribe Us

header ads

நடிகர் சந்தானம் இறந்து போக வேண்டும் என்று யாகம் நடத்தும் ஹிந்து அமைப்பு

அகில இந்திய இந்து மகா சபை என்ற அமைப்பு நடிகர் சந்தானத்திற்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது, அதில் தெரிவித்துள்ளதாவது தைத்திருநாள் அன்று திரைக்கு வந்த ஐ திரைப்படத்தில் விநாயகரை சந்தானம் இழிவு செய்வது பேசுவதாகவும் சந்தானத்தை கொடிய நோய் தாக்கி அவர் நாசமாகப்போக வேண்டும் என்று யாகம் நடத்த போவதாகவும் அதற்கு அனைவரும் வர வேண்டும் என்றும் போஸ்டர் அடித்துள்ளார்கள். 

எங்கே எப்போது இந்த யாகம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. நடிகர் சந்தானம் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட விக்ரமை பார்த்து என்ன டா புள்ளையார் சதுர்த்திக்கு செய்த  கொழுக்கட்டை மாதிரி ஆங்காங்கே வீங்கியுள்ளது என்பார், இதில் என்ன இழிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை, மேலும் இதற்கு யாகம் வளர்த்தப்போகிறோம் என்று அகில இந்திய இந்து மகா சபை கூறியிருப்பது முட்டாள்தனம் 


Post a Comment

0 Comments