- பைஷல் இஸ்மாயில் –
தேசிய அரசியல் மாற்றத்தினால் கிழக்கு மாகாண சபையிலும் பெரும் மாற்றத்தனை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.
இப் பதவியை கட்சியின் இதயமாகக் கருதப்படும் அம்பாரை மாவட்டத்திற்கு வழங்கப்படுவது டன். சகல கிராமங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்கு வழங்கப்பட வேண்டுமென்று இறக்காமம் பெரிய ஜீம்மாப் பள்ளிவாயல், நம்பிக்கையாளர் சபை பட்டினப்பள்ளி, அஷ்ரப் சமூக அமைப்பு, வெல்லங்கண்டு விவசாய அமைப்பு, ஹொலிவூட் இளைஞர் கழகம், ஜீ.சீ.எம்.இளைஞர் கழகம்போன்ற அமைப்புக்கள் கூட்டாக இணைந்து எழுத்து மூலம் கடிதங்களை அனுப்பி தங்களின் அமைப்பினால் நிறைவேற்றப்பட்ட கோரிக்கையை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிமுக்கு இன்று (17) அனுப்பி வைத்துள்ளதாக இறக்காமம் அனைத்து அமைப்புக்களின் சார்பில் மக்கள் தொடர்பாடல்அதிகாரி எம்.எல்.சமீம் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸின் தீவிர கட்சி ஆதரவாளர்களைக் கொண்ட பிரதேசம் அட்டாளைச்சேனையாகும் இப்பிரதேசத்தை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் நஸீர் என்பவர் பிரதேச வாதங்களுக்கு அப்பால் நின்று செயற்படுவதுடன் கட்சியின் தலைமைத்துவத்துக்கு என்றுமே ஒரு விசுவாசமானவராக செயற்பட்டு வரும் ஒரு உறுப்பினராவார்.
அதுமாத்திரமல்லாமல் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் இதுவரை காலமும் ஒரு அரசியல் அதிகாரத் கூட இந்த கட்சியினால் வழங்கப்படாத நிலைமேயே காணப்படுகின்றது. அந்தவகையில் அட்டாளைச்சேனைக்கு ஒரு அரசியல் அதிகாரத்தை கொடுக்க நல்லதொரு சந்தர்ப்பம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் தற்போது வந்துள்ளது.
எல்லா வகையிலும் மக்களை அரவனைத்துச் செல்லுபவரும் பிரதேச வாதமும் அற்ற ஒரு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகி ஏ.எல்.எம்.நஸீருக்கு இப்பதவி வழங்கப்பட வேண்டுமென்று இறக்காமம் பிரதேசத்திலுள்ள அணைத்து சிவீல் அமைப்புகளும் கட்சியின் தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.
எனவே இந்த நல்ல வாய்பினை எமது கட்சியும் தலைமையும் நழுவ விடமாட்டார்கள் என இறக்காமத்திலுள்ள அனைத்து அமைப்புக்களும் எதரிபார்க்கின்றது என்று அனைத்து அமைப்புக்களின் சார்பில் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எல்.சமீம் தெரிவித்தார்.
முந்திய செய்தியின் இணைப்பு : http://www.kalpitiyavoice.com/2015/01/blog-post_787.html


0 Comments