Subscribe Us

முதல்வன் பட பாணியில் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்


இலங்கையின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான தகவல்கள் வெளிவரத்த தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்திலுள்ள 5 அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த அறைகளிலிருந்து முக்கிய ஆவணங்களை சிலர் கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர் எனக் கிடைத்த தகவலை அடுத்தே இந்த அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 

அமைச்சர் சம்பிக்க ரணவக்வின் உத்தரவுக்கு அமைய முக்கிய அதிகாரிகளின் மூவரின் அறை உட்பட 5 அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனியார் பாதுகாப்பு சேவைக்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சியம் ஒன்று பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

றக்ன லங்கா என்ற தனியார் பாதுகாப்பு சேவைக்குச் சொந்தமான ஆயுதங் களஞ்சியமே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலின் போது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இந்தக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன என பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த ஆயுதக் களஞ்சியம் சீல் வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

Post a Comment

0 Comments