ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்கு இன்னும் இரு தினங்கள் மிஞ்சிய நிலையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தை தொடர்ந்து இன்று அவரின் புதல்வர் நாமல் ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்றடைந்தார்.
இவரை பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வரவேற்றுள்ளார்.
அத்துடன் கட்டளை தளபதி ஜகத் அல்விஸ்ஸினுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்..
மேலும் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ச ஊடக மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இளைஞர்களை சந்திக்கவுள்ளதாகவும், இதற்கான சகல ஏற்பாடுகளையும் அங்கஜன் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தேர்தல் விதியை மீறினார் ஜனாதிபதியின் புதல்வர்!
தேர்தல் விதிமுறைகளை மீறி இன்று பண்டத்தரிப்பு பல்லசுட்டியில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த இருபது குடும்பங்களுக்கு இராணுவம் அமைத்து கொடுத்த வீடுகளை இன்று நாமல் ராஜபக்ச கையளித்தார்.
இத தேர்தல் சட்ட விதிமுறைக்கு முரணானதென்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments