Subscribe Us

நாமல், பசில், விமல் விமானப்படைக்கு 830 லட்சம் ரூபா கடன்!

கடந்த அரசாங்கத்தின் மிக முக்கியமான தலைவர்களான விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கை விமானப்படைக்கு 830 லட்சம் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 8ம் திகதி வரையில் உலங்கு வானூர்திகள் மூலம் மேற்கொண்ட பயணங்களுக்காக இந்த பணம் செலுத்தப்பட உள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்திக்கொள்ள கட்டணமொன்றை செலுத்த வேண்டியது அவசியமானது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் 8ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 39 தடவைகள் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், இந்தப் பயணங்களுக்கான எவ்வித கட்டணங்களையும் இதுவரையில் செலுத்தவில்லை எனவும் இதற்கான மொத்த நிலுவை 830 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே உலங்கு வானூர்திகளை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

பெல் 412 மற்றும் எம்.ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் 24 தடவைகள் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை, கன்னொருவ, மொனராகல, புத்தல, தங்காலை, கல்குடா, யாழ்ப்பாணம், மன்னார், அரலகங்கவில, வீரவில, அலுத்கம மற்றும் கந்தளாய் போன்ற இடங்களுக்கு பயணம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பயணங்களுக்காக பணம் செலுத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments