Subscribe Us

வளர்ப்பு மகளை பாலியல் துன்புறுத்தி கொலை செய்ததாக கூறி பெண்ணின் தலை துண்டிப்பு


ரியாத்,
சவுதி அரேபியாவில் வசித்து வந்த பர்மா நாட்டு பெண்மணி ஒருவர், தனது வளர்ப்பு மகளை கொன்றதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து புனித மெக்கா நகரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டார்.  இது குறித்த வீடியோ யூ டியூபில் வெளியானது.

அதில், லைலா பிந்த் அப்துல் முத்தலீப் பஸ்சிம் என்ற பெண் சாலை வழியாக இழுத்து வரப்படுகிறார்.  நான் கொல்லவில்லை.  நான் கொல்லவில்லை என அவர் அலறியபடியே இருக்கிறார்.  சிறிது நேரத்தில் வாள் ஒன்றை கொண்டு மூன்று முறை தாக்கி அவரது தலை துண்டிக்கப்படுகிறது.

எனினும் இந்த வீடியோ, அதிர்ச்சி மிக்க விசயத்தை கொண்டுள்ளதால் கொள்கை அடிப்படையில் யூ டியூபில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.  தனது 7 வயது வளர்ப்பு மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி மற்றும் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பத்தால் அடித்து வளர்ப்பு மகளை அவர் கொன்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.  சக மனிதரை சுட்டு கொலை செய்ததாக கூறி சவுதி அரேபியா, குடிமகன்களில் ஒருவரை தலை துண்டித்து உள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.  கடந்த 2 வாரங்களில் இந்த தண்டனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments