திருப்பூர் மாவட்டத்தில் குடிகார தந்தை ஒருவர் இரண்டு வயது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
திருப்பூரையடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராஜ் (39), விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. வியாழக்கிழமை இரவு குடித்துவிட்டு போதையில் வந்த கோதண்டராஜ், வீட்டிலிருந்த தனது குழந்தையிடம் தவறான முறையில் நடந்துள்ளார். இதனால், அந்த குழந்தையின் உடலில் பல இடங்களில் கடித்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் குழந்தையின் தாய் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது தான் தெரியவந்துள்ளது. அந்த குழந்தை யின் தாயார் மங்கலம் காவல் நிலையத்தில் தனது கனவர் மீது புகாரளித்தார். அதன் பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து கோதண்டராஜை கைது செய்தனர். திருப்பூர் மகளீர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கோதண்டராசை சிறையில் அடைக்க நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். |
0 Comments