உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் பெப்ரவரி 14 திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது.
இந்தப்போட்டியில் பங்கேற்கும் 14 நாடுகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவு:-
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
‘பி’ பிரிவு:-
இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
பரிசு தொகை:-
உலகக்கிண்ண போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.79 கோடியாகும். இது கடந்த முறையை விட 30 சதவீதம் கூடுதலாகும். 2007ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியோடு ஒப்பிடுகையில் பரிசு தொகை 2 மடங்காகும்.
2015 உலகக்கிண்ணத்தை வெல்லும் அணிக்கு ரூ. 24 கோடி பரிசு வழங்கப்படும். 2வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி கிடைக்கும்.
மேலும் அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.5.4 கோடியும், காலிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
0 Comments