பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பல்கலைக்கழக அனுமதிப் பத்திரம் கிடைக்காத மாணவிக்கு அனுமதி வழங்குமாறு வழங்கிய கடிதம் தொடர்பாக மீள்பரிசீலனை செய்யப்படுமென உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவி நியமிக்கப்பட்டமை அரசியல் நியமிப்பாக இருக்குமென பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் சந்தேகிக்கின்றது.
குறித்த சங்கத்தின் முன்னாள் தலைவர் நிர்மல் ரஞ்சன் தேவசிறி நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு குறித்த தலைவிக்கு இப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தகுதி இல்லை என தெரிவித்துள்ளார்.


0 Comments