Subscribe Us

header ads

100 நாள் வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் நிகழ்வு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் (PHOTOS)

பைஷல் இஸ்மாயில் –


ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனாவின் 100 நாள் வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த 100 நாள் வேலைத்திட்டத்தினை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்னெடுப்பதற்கான செயற்திட்டம் தயாரிப்பதற்கான விரிவான கலந்துரையாடல் நாளை காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இதில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள், துறைசார் பிரமுகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.

நாளை இடம்பெறவுள்ள இந்த கூட்டத்துக்கான பணியினை முன்னெடுக்கும் வேலைகள் யாவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இன்று (24) சனிக்கிழமை அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவினர் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments