Subscribe Us

header ads

மைத்திரியும், ரணிலும் யுத்தத்தை ஏற்படுத்த முயற்சி - அதாவுல்லா (PHOTOS)

(யு.எல்.எம். றியாஸ்)


நாம் பெற்ற சுதந்திரத்தை மைத்திரியும் ரணிலும் ஏனைய கடல் கடந்த நாடுகளில் வாழும் புலிகளும் சேர்ந்து இன்று இந்த மண்ணிலே யுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்துகொண்டு வருகின்றார்கள் அதற்கு  நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரித்து இன்று (29.12.2014) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் மாபெரும் பெண்கள் மாநாடு இடம்பெற்றது.

கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர்,மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ,எம்.எம். நௌசாத் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மாநாட்டிற்கு உள்ளூராட்சி மாகான சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இம் மாநாட்டில் கிழக்கு  மாகான சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments