Subscribe Us

header ads

மைத்திரியின் பிரச்சாரக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் ஹுனைஸ் பாறூக்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் மைத்திரிபாலவின் தேர்தல் கூட்டங்களைப் புறக்கணித்து வருகிறார்.

நேற்று வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பொது எதிரணியினர் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தினர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி மைத்திரிக்கு ஆதரவாக இதுவரை பிரச்சாரம் செய்து வந்த ஹுனைஸ் பாறூக் எம்.பி நேற்றைய கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.

அரசில் இருக்கும் போது முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் முரண்பட்டிருந்த ஹுனைஸ் பாறுக் எம்.பி. அரசில் இருந்து தேர்தல் அறிவித்ததும் உடனடியாக வெளியேறி பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தார்.

ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் தமது கட்சியினருடன் அரசில் இருந்து வெளியேறி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கினார்.

அதுமட்டுமின்றி,  நேற்று வன்னியில் இடம்பெற்ற பொதுவேட்பாளரின் தேர்தல் கூட்டங்களை றிசாத் பதியுதீனே முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதனால் ஹுனைஸ் பாறூக் எம்.பி. விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், மீண்டும் அரசுடன் இணைந்து கொண்டதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவர் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவலினை உறுதிப்படுத்த முடியவில்லை.

Post a Comment

0 Comments