Subscribe Us

header ads

வழமையாக கற்பிட்டியில் அமையும் தாபல் மூலம் வாக்களர்களுக்கான வாக்குச்சாவடி நீக்கம்! இது திட்மிட்ட சதியா???


கற்பிட்டியில் தாபல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்ற அரச சேவையாளர்கள் இம்முறை புத்தளம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். கற்பிட்டியில் ஒரு தாபல் வாக்குச் சாவடி கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை வளாகத்தில் அமைத்துள்ள கோட்டக் கல்வி காரியலத்தில் நடைபெறுவது வழமை. இம்முறை வழமைக்கு மாறாக கற்பிடியில் அமைய வேண்டிய வாக்குச்சாவடியை திட்டமிட்டு அகற்றிவிட்டதாக கற்பிட்டி அரச அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாம் பல ஆசிரியர்கள் அரச சேவகர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது இம்முறை வாக்களிக்க தாம் வாகணங்களை கூலிக்கு அமர்த்தி  புத்தளம் சென்று வாக்களித்து வந்ததாகவும் இதில் பெரும்பாலானவார்கள் வாக்களிக்க செல்லவில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் பிரதேச அரசியல் தலைமைகளுக்கு தெரியபடுத்தியும் அதற்க்கு எவ்வித பலனும் கிட்டவில்லை என தெரிவித்தனர்.


இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பவர் யார்கற்பிட்டி பிரதேச செயலக செயலாளர்பிரதேச சபை  தலைவர்கற்பிட்டி அரச ஊழியர்கள் ஒன்றியம்புத்தளம் மாவட்ட முஸ்லிம் பிரதேச ஆளும் கட்சி அமைப்பாளர் இவர்ளின் செயற்பாடு இந்த விடயத்தில் எவ்வாறு இருக்கும்??? உரிய தரப்பினரே இது உங்கள் கவனத்திற்கு உரிமைகளை அள்ளிக்கொடுக்காமல் வென்றெடுங்கள்.

இது தொடர்பாக நாம் மூத்த ஓய்வுபெற்ற  அரச அதிகாரி ஒருவரிடம் வினவிய போது. இவை அனைத்தும் திரைமறைவில் திட்டமிட்டு நடப்பதாகவும் கற்பிட்டியில் இருக்கும் அனைத்து காரியாலயங்களும்  வளங்களும் வெளி இடத்திற்கு எடுத்து செல்லும் இறகிசிய திட்டங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.   

/ASM

Post a Comment

0 Comments