Subscribe Us

header ads

முஸ்லிம் காங்கிரஸுக்குள் நடக்கும் மகாபாரதம்

-------------------------------------------------------------------------------------------
பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கும் குந்திதேவிகளும்
முற்றாக மறுத்து நிற்கும் கர்ணன்களும்
----------------------------------------------------------------------------------

பாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அர்ச்சுனனைக் கொல்ல கர்ணன் நாகாஸ்திரத்தை நிச்சயம் பயன்படுத்துவான் என்று கிருஷ்ணனுக்கு தெரியும். அதனால் அதற்கு முன்பே அவர் குந்தியிடம் கர்ணன் பாண்டவர்களில் மூத்தவன் என்பதை சொல்லி விடுகிறார். அது மட்டுமல்ல இதை கர்ணனிடம் போய் சொல்லுமாறும் கூடவே அவனை கௌரவர்களை விட்டு பிரிந்து பாண்டவர் அணியில் சேருமாறு கேட்கவும் சொல்கிறார். அதற்கு அவன் ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் நாகாஸ்திரத்தை அர்ச்சுனன் மீது ஒரு தடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க அவனிடம் வரம் வாங்குமாறும் கூறுகிறார்.


குந்தியும் உடனே கர்ணனை சென்று பார்த்து தான்தான் அவன் தாய் என்று சொல்லி அழுகிறாள். கர்ணன் இதைக் கேட்டு மகிழ்கிறான். பின்னர் குந்திதேவி அவனை பாண்டவர் அணியில் சேர நிர்பந்திக்கிறாள். அதற்கு கர்ணன் உறுதியாக மறுத்து விடுகிறான். அதனால் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருதடவைக்கு மேல் பிரயோகிக்காமல் இருக்க வேண்டும் என்று அவனிடம் குந்தி கேட்க அவனும் சம்மதிக்கிறான். என்ற மகாபார கதையின் மேற்சொன்ன காட்சி எனக்கு மிகவும் பிடித்தது.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு விடயம் மேற்சொன்ன மகாபாரதத்தின் காட்சியையே எனக்கு நினைவுக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு தங்கள் கட்சி ஆதரவு வழங்கும் என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் (எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் உயர் பீட அங்கத்தவர்கள்) தற்போதும் கலந்தாலோசனைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்தே இந்தக் கருத்துக் கேட்டல் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.

“இன்றைய நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவே மீண்டும் வெற்றியடைய கூடியவராக உள்ளார். எனவே, இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் உங்கள் நிலைமை என்ன“ என்று சில முக்கியஸ்தர்களிடம் கருத்துக் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான கேள்வியால் பலரும் தடுமாற்ற நிலையை அடைந்துள்ளார். மூளைச் சலவை செய்வதன் மூலம் அவர்களது இணக்கத்தை பலாத்காரமாகப் பெறும் முயற்சியாகவே இதனை நோக்க முடிகிறது.

இதேவேளை நாளை (27) மாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் முடிவினை நாளை இரவு 10.00 மணியளவில் அறிவிக்க கூடியதாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.. வரும்... அல்லது வராதா என்று....

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Post a Comment

0 Comments