ஐ.பி.எல் சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தனக்கு அதிகமாக அநீதி இழைத்துவிட்டதாக ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கீட் சவான், அஜீத் சண்டிலா ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பாக இவர்கள் மீது பொலிசார் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தான் அதிகமாக பாதிக்கப்பட்டதாக ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். எனது தலைவிதியை 5 நிமிடத்திலேயே முடிவு செய்தது.
இந்த விடயத்தில் கிரிக்கெட் வாரியம் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துவிட்டது. எனக்கு எதிராக எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
என் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் என்னால் இதுபற்றி அதிகமாக எதுவும் கூற இயலாது. என்னை நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments