-ஜே.எம்.ஹாபீஸ்-
இன்றைய அரசியல் அரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறுமா? வெளியேற வேண்டுமா என்ற வாத பிரதி வாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் பலரது கருத்துக்களும் வௌவேறு கோணங்களில் தெரிவிக்கப் படுகின்றன.
அதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்ன தெரியுமா? அரசை விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறுவதன் மூலம் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதே.
அது எப்படி என்று பலர் கேட்கலாம். அதற்கு அவர்கள் தரும் விளக்கம் இதோ-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ன முடிவை எடுத்ததாலும் முஸ்லிம்களைப் பொருத்தவரை வாக்களிப்பில் அது எது வித மாற்றத்தை ஏற்படுத்தாது. மாறாக அவர்கள் வெளியேறினால் அது எதிரணி பொது வேட்பாளருக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
இலங்கையிலுள்ள இனவாத சக்திகள் றவூப் ஹகீம் அவர்கள் வெளியேறும் வரை காத்து நிற்கின்றனர். இது வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறாமை இனவாதிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளியேறிய பின் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தீய சக்திகள் எல்லாம் இப்போது மைந்திர்ப்பால தலைமையில் ஒன்றிணைந்துள்ளார்கன். ‘நாட்டின் மீது விசுவாச முள்ள பௌத்த மக்களே நீங்கள் மகிந்தவின் தலைமையில் ஒன்றிணையுங்கள். நாட்டுக்கு எதிரான தீய சக்தியை முறியடிப்போம். வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு இயங்கும் சக்திகளை முறியடிப்போம்.
நாடு துண்டாடப் படுவதில் இருந்து பாதுகாப்போம்’ என்று கூறி போர்க்கொடி தூக்க முடியும். அது மட்டு மல்ல சில கசப்பான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம். அப்போது கசப்பான உண்மையைக் காட்டி அதன் மூலம் பலர் குளிர்காய முன்வருவர்.
அதேநேரம் மற்றொறு முஸ்லிம் பிரதி அமைச்சர் தற்போது நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் இனவாதிகள் அவர் அரசை விட்டு வெளியேறுவதையும் எதிர்பபாhத்துள்ளனர். அனால் அவர் மேற்கொண்டுள்ள நடிவடிக்கை ஓரளவு நல்லதாகச் சிலர் காண்கின்றனர்.
இதனால் பாரிய தலையிடி ஒன்று நீங்கியுள்ளதாகக் கூறுகின்றனர். இல்லாவிடில் இதனை வைத்துக்கொண்டு பேரின சக்திகள் வேறு வகையான பிரசாரததில் இறங்கி விடுவர். தற்போதைய நிலையில் சாதகமான முடிவு வரும்வரை காத்திருக்க முடியும் என்கின்றனர். இதே பாணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் உம்ராவிற்காவது சென்று சிறிது நாட்கள் கழித்து வருவாராயின் கிழற்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு சற்று நிம்மதியாக இருக்க முடியும் என்கின்றனர்.
இன்னொருவரது கருத்துப் படி தற்போது வடகிழக்கிற்கு வெளியே அண்மைகாலமாக நிம்மதி இழந்த வாழ்ந்த முஸ்லிம்கள் தற்காலிக மாவது சற்று ஆருதல் அடைந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறும் தீர்மானத்தை எடுத்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லீம்களின் நிம்மதியை ஏன் கெடுக்க வேண்டும் எனப் பலர் கேட்கின்றனர்.
அவர்கள் அப்படி வெளியேறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எந்த விதத்திலும் பலன் அளிக்காது மாறாக தற்போதைய ஆட்சியாளருக்கு பேரினவாதிகளின் சக்தியும் வாக்குப் பலமும் அதிகரிக்கவே அது உதவும். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஏதும் பதவி வகிப்பது என்பது சவால் நிறைந்த காரியம்.
அச்சவாலுக்காக தற்போது உறக்கத்தில் இருக்கும் இனவாதிகளைத் தூண்டி விடுவதாகவும் அமையலாம் என்று கூறுகின்றனர்.
வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களைப் பொருத்தவரை றவுப் ஹகீம் வெளியேறுவது சிறந்ததாகத் தெரியலாம். ஆனால் வடகிழக்கிற்கிற்கு வெளியே வாழும் ஒட்டு மொத்தமான முஸ்லீம்களையும் சிக்கலில் மாட்ட வைக்கும் ஒரு செயலாக அது சில வேளை அமையலாம் எனப் பலர் கருதுகின்றனர்.
கூட்டு மொத்தமாக முஸ்லீம்களின் பாதுகாப்பு என்பது எமது அரசியல் தலைமைகள் கட்சி மாறி சாதனை செய்வதல்ல. நடப்பதை அமைதியாக இருந்து அவதானித்து இறுதி முடிவு நன்கு தெரியும் வரை காத்திருப்பதாகும் என்று பலர் கூறுகின்றனர்.
இதனை வேறு வகையில் கூறுவதாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடசி தாவி மைந்திரியின் வெற்றிக்கு எதனையும் சாதிக்காது. மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டனர். கட்சி மாறி வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு சிக்லை மட்டும் தோற்றுவிக்கலாம் என்கின்றனர். காரணம் 70 சதவீத பௌத்த சிங்களவர் மத்தியில் இன்னும் அடிமை மனப் பாங்கு மாறவில்லை.
தற்போது அவர்கள் ஒரு அரசனுக்கு கீழே நிம்மதியாக வாழும் பிரமையை ஏற்படுத்தி உள்ளனர். அரசனை மீறிச் செல்லும் மன நிலை இன்னும் ஏற்பட வில்லை.
நாட்டிலுள்ள 10 சதவீத முஸ்லீம்களால் அந்த மனப் பாங்கை ஏற்படுத்த முடியுமா? என்பது ஒரு கேள்வி. வடக்ழக்கில் இருந்து முடியும் என்ற பதில் ஒரு சிலவேளை வரலாம். ஆனால் பெரும்பான்மை இன மக்களின் மனதில் மாற்றம்கள் தெளிவாக ஏற்படாத நிலையில் வம்மை விலைகொடுத்து வாங்கிக் கொள்ளத் தேவை இல்லை என்பது தூரசிந்தனையாளர்களது கருத்தாகும்.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் காலம் தாழ்த்தும் அளவிற்கு வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவர்.
*கட்டுரை ஆசிரியர்: ஜே.எம்.ஹபீஸ் *


0 Comments