செல்போன் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும், புதிது புதிதான பல அப்டேட்களுடன் செல்போன் மாடல்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ரஷ்ய நிறுவனத்தின் ‘யோட்டா-C 9660’ இருபக்க திரை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘யோட்டா’வில் அடங்கியுள்ள புதுமைகள், பலரின் உள்ளத்தை கொள்ளை கொண்டுள்ளன. இதுவரை இருந்த செல்போன்களில், இருபக்க கேமராக்களை பார்த்திருப்போம். ‘யோட்டா’வில், டிஸ்ப்ளே எனப்படும் திரையே இருபக்கமும் (Dual display) இருப்பதுதான் ஸ்பெஷல். இரண்டு பக்கமும் 4.3 இன்ச் அளவுக்கு மெயின் டிஸ்பிளே ஐ.பி.எஸ். எல்.சி.டி. ஸ்கிரீன்.
முன்பக்க டிஸ்பிளே, ஹெச்டி ரெஸொல்யூஷன் 1280X720, பின்பக்க டிஸ்ப்ளே 640X360 ரெஸொல்யூஷன். இதன் முக்கியச் சிறப்பு, பேட்டரி சுத்தமாக தீர்ந்தாலும், முன்பக்க டிஸ்பிளே ஆஃப் ஆனாலும், பின்பக்க டிஸ்பிளே மட்டும் ஆனில் இருக்கும். காரணம், இதில் உள்ள இ-லிங்க் என்னும் டெக்னாலஜிதான். அறிமுகமில்லாத ஓரிடத்தில், உங்கள் செல்போனில் உள்ள மேப் வசதி மூலம் வழியைத் தேடும்போது, பேட்டரி தீரும் இக்கட்டான நிலைமையில் மாட்டிக் கொண்டாலும், கவலைப்பட வேண்டியதில்லை.
சன் புரொடக்ஷன் லேயர் இருப்பதால், இதை சூரிய ஒளியிலும் பார்க்க முடியும். கீறல் மற்றும் உடைவதிலிருந்து பாதுகாக்க, ‘யோட்டா’வின் திரை முழுக்க முழுக்க கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேயில் தொடர்ந்து 50 மணி நேரம் படித்தாலும் கண்கள் சோர்வடையாமல் இருக்கும்.
இதில் நோட்டிஃபிகேஷன், மேப், போர்டிங் பாஸ், சோஷியல் மீடியா அப்டேட்ஸ் போன்றவற்றை சேவ் செய்து கொள்ளலாம். கூடவே உங்களுடைய உணர்வுகளை அழகிய படங்கள் மற்றும் மேற்கோள்களுடன் பதிவிடும் வசதியும் உள்ளது. முக்கியமான குறிப்புகளையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.
2 GB Ram, இருபக்க தொடுதிரை, 13 மெகா பிக்ஸல் மெயின் கேமரா மற்றும் 1 மெகா பிக்ஸல் செகண்டரி கேமரா, 32 GB மாஸ் மெமரி, LED Flash போன்றவை ‘யோட்டா’ C 9660-யின் கூடுதல் சிறப்புகள். விலை என்ன என்கிறீர்களா?

.jpg)
0 Comments