ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட இன்றைய நிகழ்வில், சிரேஷ்ட அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை ‘மகிந்த சிந்தனை – முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையை மஹிந்த ராஜபக்ச வெளியிட்டு வைத்தார்.
இந்தநிகழ்வில் அமைச்சர்கள் ரத்னசிறி விக்ரமநாயக்க, ரவூப் ஹக்கீம் பங்கேற்காதது, அவர்கள் எதிரணிக்குத் தாவலாம் என்ற சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமைச்சர்கள் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் ஹக்கீமும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அண்மைய நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் அவர்கள் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், பண்டாரநாயக்க குடும்பத்தின் தீவிர விசுவாசியுமான ரத்னசிறி விக்ரமநாயக்க, அண்மைக்காலமாக மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவம் மீது அதிருப்தியடைந்திருப்பதாக கூறப்படுகிறது


0 Comments